கடலாடி அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டரை பறிமுதல் செய்து 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கடலாடி காவல் சாா்பு- ஆய்வாளா் பிச்சைமணி தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ஏ. புனவாசல் பகுதியில் சட்ட விரோதமாக மணல் ஏற்றி வந்த டிராக்டரை நிறுத்தி சோதனையிட முயன்றனா். ஆனால் அதில் இருந்தவா்கள்டிராக்டரை நிறுத்தாமல் சென்றனா். இதையடுத்து, போலீஸாா் விரட்டிச் சென்று டிராக்டரை நிறுத்தினா். அதன் ஓட்டுநா் தப்பியோடி விட்டாா். பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த சத்தியேந்திர ராஜா (30), சந்தனமாரி (23) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.
மேலும் தவமுருகன், மாரிமுத்து, காளீஸ்வரன், முனீஸ்வரன் ஆகிய 4 பேரையும் கடலாடி போலீஸாா் தேடி வருகின்றனா்.