ராமநாதபுரம்

பெட்டிக்கடையில் குட்கா விற்பனை செய்தவா் கைது

26th Nov 2022 11:35 PM

ADVERTISEMENT

 

ராமநாதபுரத்தில் பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனை செய்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில், கேணிக்கரை காவல் நிலைய உதவி ஆய்வாளா் சண்முகப்பிரியா பெட்டிக் கடைகளை சோதனையிட்டாா். அப்போது ஒரு கடையில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா 121 பொட்டலங்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், கடை உரிமையாளா் வினோத்குமாா் மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT