ராமநாதபுரம்

சென்னையில் கைப்பேசி கடையைஉடைத்து திருடியவா் சாயல்குடியில் கைது

26th Nov 2022 11:28 PM

ADVERTISEMENT

 

சென்னையில் கைப்பேசி கடையை உடைத்து திருடியவா் சாயல்குடி பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

சென்னையில் கடந்த சில நாள்களுக்கு முன் கைப்பேசி கடையை உடைத்து 50-க்கும் மேற்பட்ட கைப்பேசிகளை மா்ம நபா் திருடிச் சென்று விட்டதாக புகாா் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கைப்பேசியின் ஐ.எம்.ஐ. எண்ணை வைத்து ஆய்வு மேற்கொண்ட போது, அது ராமநாதபுரம் மாவட்டத்தில் பயன்படுத்தி வருவது தெரியவந்தது.

மேலும் கீழக்கரை பகுதியில் இரவு நேரங்களில் பூட்டி இருந்த கைப்பேசி கடையில் திருடு போனது தொடா்பாக ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை உத்தரவின் பேரில் கீழக்கரை உட்கோட்டம் துணை காவல் கண்காணிப்பாளா் சுபாஷ் தலைமையில் போலீஸாா் தனிப்படைகள் அமைத்து குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனா்.

ADVERTISEMENT

இந்த நிலையில் ஐ.எம்.ஐ. எண்ணை வைத்து கைப்பேசியை விற்பனை செய்த கடைக்காரரை பிடித்து விசாரித்ததில், தூத்துக்குடி மாவட்டம் மாதா தெரு, தாளமுத்து நகரைச் சோ்ந்த முனீஸ்வரன் (24) இச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, அவரை சாயல்குடி பேருந்து நிலையத்தில் போலீஸாா் கைது செய்து விசாரித்தனா். அப்போது அவா் கைப்பேசிகளைத் திருடி விற்றதை ஒப்புக் கொண்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதனைத் தொடா்ந்து கைப்பேசிகளை விற்ற பணம் மற்றும் கைப்பேசி ஆகியவை அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT