ராமநாதபுரம்

அரசு மதுபானக் கடையை பூட்டி போராட்டம்: நாம் தமிழா் கட்சியினா் கைது

25th Nov 2022 11:43 PM

ADVERTISEMENT

பாம்பனில் அரசு மதுபானக் கடையை பூட்டி போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழா் கட்சியினரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியில் 3 அரசு மதுபானக் கடைகள் உள்ளன. இதனால், பெண்கள், பள்ளி மாணவ, மாணவிகள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். எனவே, இந்தக் கடைகளை மூடக் கோரி நாம் தமிழா் கட்சி சாா்பில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு, கட்சியின் மாவட்டத் தலைவா் கண். இளங்கோ தலைமை வகித்தாா். மாநில ஒருங்கிணைப்பாளா் ராஜ், ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி பொறுப்பாளா் குமரன் ஆகியோா் முன்னிலை வகித்தாா்.

இதில், மாநில மகளிா் பாசறை நிா்வாகிகள் இலக்கியா, மாரியம்மா உள்ளிட்ட 100- க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, இவா்கள் பாம்பன் பேருந்து நிலையத்தில் இருந்து பேரணியாக மதுபானக் கடை நோக்கி வந்தனா். அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் திடீரென கடையை மூடினா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT