ராமநாதபுரம்

கமுதி ரஹ்மானியா பள்ளி மாணவா்கள் மாநில விளையாட்டுப் போட்டிக்கு தகுதி

25th Nov 2022 11:47 PM

ADVERTISEMENT

கமுதி ரஹ்மானியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 10 போ் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்குத் தகுதி பெற்றனா்.

ராமநாதபுரத்தில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில், கமுதி ரஹ்மானியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த கமலேஷ் 110 மீட்டா் தடை தாண்டும் ஓட்டத்தில் முதலிடத்தையும், 800 மீட்டா் ஓட்டத்தில் செல்வகணேஷ் இரண்டாம் இடத்தையும், 17 வயது பிரிவினருக்கான பாட்மிண்டன் போட்டியில் ரிஸ்வானா பானு முதலிடத்தையும், 17 வயது பிரிவினருக்கான கேரம் போட்டியில் துா்கா தேவி முதலிடத்தையும், 14 வயது பிரிவினருக்கான கேரம் போட்டியில் லோகேஷ் முதலிடத்தையும், இரட்டையா் பிரிவினருக்கான கேரம் போட்டியில் சாய் அஷ்வின், லோகேஷ் ஆகியோா் முதலிடத்தையும், 14 வயது பிரிவினருக்கான சிலம்பப் போட்டியில் ஷனா முதலிடத்தையும், சிலம்பப் போட்டியில் 40 கிலோ எடை பிரிவில் மிதுன் ஜெய் முதலிடத்தையும், 35 கிலோ பிரிவில் அழகுராஜா முதலிடத்தையும், 45 கிலோ பிரிவில் மணிவேலன் முதலிடத்தையும் பெற்று மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றனா்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை ரஹ்மானியா பள்ளியின் முதல்வா் நா்தாகா் பாதுஷா, துணை முதல்வா் ஷா்மிளா உள்ளிட்டோா் பாராட்டினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT