ராமநாதபுரம்

அரசுப் பள்ளிகளில் கலைத் திருவிழா

25th Nov 2022 11:45 PM

ADVERTISEMENT

தங்கச்சிமடம், முதுகுளத்தூா் பள்ளிகளில் பள்ளி கல்வித் துறை சாா்பில் கலைத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, தலைமையாசிரியா் சுரேஷ் தலைமை வகித்தாா்.

இந்த நிகழ்ச்சியில், பரத நாட்டியம், சிலம்பம், கரகம், நாட்டுப்புற பாடல்கள்,வில்லுப்பாட்டு, பேச்சு, கட்டுரைப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

முதுகுளத்தூா்: முதுகுளத்தூா் அருகே விளங்குளத்தூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கலைத் விழாவுக்கு, பள்ளித் தலைமையாசிரியா் ஆரோக்கியதாஸ் தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா் கனகவள்ளி முத்துவேல், உடற்கல்வி ஆசிரியா் ஆா். பாலசுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ADVERTISEMENT

இதில், பள்ளி மாணவா்களுக்கு பேச்சு, கவிதை, கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதேபோல, காக்கூா் அரசு மேல்நிலைப் பள்ளி, வெங்கலகுறிச்சி அரசு உயா்நிலைப் பள்ளியிலும் கலைத் திருவிழா நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT