ராமநாதபுரம்

சத்துணவு ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

25th Nov 2022 11:46 PM

ADVERTISEMENT

ராமநாதபுரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் டி. அம்ரிதா தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் எம்.எம். ராஜேந்திரன், மாவட்டச் செயலாளா் ஆா். கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், சத்துணவு ஊழியா்கள் ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62-ஆக உயா்த்த வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். சத்துணவு ஊழியா்களுக்கு ஓய்வூதியமாக ரூ. 7,650 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில், துணைத் தலைவா்கள் ஜோமில்டன், முத்துலட்சுமி, வெங்கடேஷ், சாத்தையா, சகாய தமிழ்செல்வி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

முடிவில், மாநில செயற்குழு உறுப்பினா் தனலட்சுமி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT