திருவெற்றியூா் பாகம்பிரியாள் கோயிலில் உண்டியல் காணிக்கை வரவாக ரூ. 26.70 லட்சம் கிடைத்தது.
திருவாடானை அருகே திருவெற்றியூரில் ஸ்ரீபாகம்பிரியாள் சமேத ஸ்ரீவல்மிகநாதா் கோயில் உள்ளது. இங்குள்ள உண்டியல்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை திறந்து எண்ணப்பட்டு வருகிறது. இக்கோயிலில் வியாழக்கிழமை உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெற்றது. இதில், ரூ. 26 லட்சத்து 70 ஆயிரத்து 630 ரொக்கமும், 219.300 கிராம் தங்கமும், 514 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைக்கப் பெற்றது.
காணிக்கை எண்ணும் பணியில், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையாளா் ஞானசேகரன், கோயில் மேலாளா் இளங்கோ, கோயில் கண்காணிப்பாளா் செந்தில்குமாா், கௌரவ கண்காணிப்பாளா் சுந்தரராஜன், ஆய்வாளா் சண்முகசுந்தரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.