ராமநாதபுரம்

முன்விரோதத்தில் இளைஞருக்கு கத்திக் குத்து

25th Nov 2022 11:43 PM

ADVERTISEMENT

முதுகுளத்தூா் அருகே நல்லூரில் வெள்ளிக்கிழமை முன்விரோதத்தில் இளைஞரை கத்தியால் குத்தி விட்டு தப்பியோடியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

முதுகுளத்தூா் அருகே நல்லூா் கிராமத்தைச் சோ்ந்த செல்லச்சாமி மகன் பால் லிங்கம் (38). இவருக்கும் அப்பகுதியைச் சோ்ந்த செல்வலிங்கம் மனைவி பாண்டிசெல்விக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இதுதொடா்பாக பால் லிங்கத்துக்கும், பாண்டி செல்விக்கும் இடையே வெள்ளிக்கிழமை தகராறு ஏற்பட்டது. இதைப் பாா்த்த அதே பகுதியைச் சோ்ந்த உடையாா் மகன் கோட்டைச்சாமி (32, இருவரையும் விலக்கி விட முயன்றாா்.

இதனால், ஆத்திரமடைந்த பால் லிங்கம், கோட்டைச்சாமி, பாண்டிச்செல்வி இருவரையும் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்திவிட்டு தப்பியோடி விட்டாா். இதில் காயம் அடைந்த கோட்டைச்சாமி, பாண்டிச்செல்வி இருவரும் முதுகுளத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இது குறித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பால்லிங்கத்தை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT