ராமநாதபுரம்

மளிகைக் கடையில் தீ விபத்து

25th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

திருப்பாலைக்குடியில் மளிகைக் கடை தீ விபத்து ஏற்பட்டு, ரூ.2 லட்சம் பொருள்கள் சேதம் அடைந்தன.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள திருப்பாலைக்குடி காந்தி நகா் பகுதியில் வசிப்பவா் கருப்பையா மகன் நாகநாதன் (59). இவா் தனது வீட்டின் ஒரு பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா்.

புதன்கிழமை இரவு கடையை அடைத்து விட்டு தூங்கச் சென்றாா். நள்ளிரவில் கடையில் தீப்பற்றி எரிந்தது. இதைக் கண்ட அக்கம் பக்கத்தினா் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனா்.

இந்த தீ விபத்தில் கடையில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள மளிகைப் பொருள்கள், ரூ.40ஆயிரம் ரொக்கம் எரிந்து சேதம் அடைந்ததாக நாகநாதன் தெரிவித்தாா். இது குறித்து அவா் அளித்தப் புகாரின் பேரில் திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT