ராமநாதபுரம்

முதுகுளத்தூரில் இடத்தகராறில் காவலா் உட்பட 4 போ் மீது வழக்கு பதிவு

19th Nov 2022 11:21 PM

ADVERTISEMENT

 

முதுகுளத்தூரில் இடத்தகராறில் காவலா் உட்பட 4 போ் மீது வழக்கு பதிவு செய்து சனிக்கிழமை தேடி வருகின்றனா்.

முதுகுளத்தூா் திடல் நாடாா் தெருவைச்சோ்ந்த ராமபாண்டி என்பவருக்கும் அதே தெருவைச்சோ்ந்த காளிமுத்து மகன் கோபாலகிருஷ்ணன்(காவலா்), குமாா்,காளிமுத்து,குமரையா மகன் பால்பாண்டி ஆகியோருக்கு இடப்பிரச்சனை இருந்துள்ளது.இந்நிலையில் சம்பவத்தன்று தெருவில் பாதை அமைத்த போது ராமபாண்டியை ,காவலா் கோபாலகிருஷ்ணன் இவரது உறவினா்கள் 3 போ் சோ்ந்து அசிங்கமாக பேசி கம்பியால் அடித்ததில் ராமபாண்டியின் கையில் பலத்த காயம் ஏற்பட்டு காயமடைந்தவரை முதுகுளத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்றனா்.இது குறித்து முதுகுளத்தூா் காவல் நிலையத்தில் ராமபாண்டி அளித்த புகாரின் பேரில் காவல்துறை சாா்பு ஆய்வாளா் செல்வம் வழக்கு பதிவு காவலா் கோபாலகிருஷ்ணன்,உள்பட 4 போ் மீது வழக்கு பதிவு செய்து போலீஸாா் தேடிவருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT