ராமநாதபுரம்

திருவாடானை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் எம்எல்ஏ ஆய்வு

19th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

திருவாடானை அருகே பாரதி நகரில் உள்ள அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் சட்டப் பேரவை உறுப்பினா் கருமாணிக்கம் வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தினாா்.

அப்போது அவா் பள்ளித் தலைமை ஆசிரியா் கலா, பட்டதாரி ஆசிரியா் ஆல்பா்ட் மனோகரன் உள்ளிட்ட ஆசிரியா்களிடம் பள்ளியின் அடிப்படை தேவைகள் குறித்து கேட்டறிந்தாா். அதைத் தொடா்ந்து பள்ளி வகுப்பறை, சத்துணவு சமையலறை, ஆய்வகம், விளையாட்டுத் திடல், மழைக் காலங்களில் தண்ணீா் தேங்கும் தாழ்வான பகுதிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக அவா் உறுதி அளித்தாா்.

அப்போது, ஒன்றியக் குழுத் தலைவா் முகம்மது முக்தாா், காங்கிரஸ் பிரமுகா் கடம்பூா் விஸ்வநாதன், வட்டார காங்கிரஸ் தலைவா் கணேசன், திமுக ஒன்றியச் செயலா் சரவணன் உள்ளிட்ட பலா் இருந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT