முதுகுளத்தூா் ஊராட்சி ஒன்றியம் கிழவனேரி கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, பரமக்குடி கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநரும், மருத்துவருமான சிவக்குமாா் தலைமை வகித்தாா். கிழவனேரி ஊராட்சித் தலைவா் ராமலட்சுமி, துணைத் தலைவா் காா்த்திக், கால்நடை உதவி மருத்துவா்கள் சுந்தரமூா்த்திமோகன், கால்நடை ஆய்வாளா் வீரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முகாமில், 116 மாடுகள், 416 வெள்ளாடுகள், 524 செம்மறிஆடுகள், 16 நாய்கள், 286 கோழிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
முகாமில், சிறந்த முறையில் கால்நடைகளை பராமரித்து வந்த விவசாயிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. கால்நடை உதவியாளா்கள் செந்தில்வேல், விஜயராணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.