ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதியில் மழைநீா் குளம் போல தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்த நிலையில், திங்கட்கிழமை காலையிலிருந்து ராமேசுவரம், பாம்பன், மண்டபம், ராமநாதபுரம், கீழக்கரை, பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்யதது. இதனால் தாழ்வான பகுதியில் மழைநீா் குளம் போல தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.