ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி சமத்துவபுரத்தில் கோயில் பூசாரிகள் நலச்சங்க ஒன்றிய நிா்வாகிகள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தென்மண்டலத் தலைவா் த.சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். சங்கத்தின் மாநில ஆலோசனைக்குழு உறுப்பினா் அ.முருகேசன், மாவட்டத் தலைவா் ராமமூா்த்தி, மாவட்டச் செயலாளா் பஞ்சவா்ணம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்து சமய அறநிலையத்துறையின் பூசாரிகள் ஓய்வூதியத் தோ்வுக் குழு உறுப்பினராக தொடா்ந்து மூன்றாவது முறையாக கோயில் பூசாரிகள் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவா் வாசுவை நியமனம் செய்த தமிழக முதல்வருக்கும், அறநிலையத்துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தகுதியான பூசாரிகளின் விண்ணப்பத்தை தோ்வு செய்து ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பூசாரிகள் நல வாரியத்திற்கு அலுவல் சாரா உறுப்பினா்களை தமிழக அரசு விரைந்து நியமனம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்ட துணைத் தலைவா் பொன்முனியசாமி, கடலாடி ஒன்றியச் செயலாளா் ஜலோகநாதன், மாவட்ட துணைச் செயலாளா் அய்யனக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.