ராமநாதபுரம்

5 நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்கச் சென்ற ராமேசுவரம் பகுதி மீனவர்கள்

14th Nov 2022 09:20 AM

ADVERTISEMENT

5 நாட்களுக்கு பிறகு ராமேசுவரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு இன்று மீன்பிடிக்கச் சென்றனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை பெய்து வரும் நிலையில் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக 46 முதல் 60 கிலோ மீட்டர் வரையில் காற்றின் வேகம் அதிகளவில் இருக்கும் என்பதால் மீனவர்களின் பாதுகாப்பு கருதி கடந்த 5 நாட்களாக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறையினர் தடை விதித்திருந்தனர். 

இதையும் படிக்க- மகாராஷ்டிரம்: கல்ம்நூரி கலாசார விழாவில் டிரம் வாசித்து ராகுல்காந்தி அசத்தல்

இந்நிலையில், வங்கக் கடலில் காற்றின் வேகம் குறைந்ததால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறையினர் இன்று அனுமதி அளித்தனர். இதனைதொடர்ந்து, ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தொண்டி, சோளியகுடி, கீழக்கரை, ஏர்வாடி உள்ளிட்ட துறைமுகங்களில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். 

ADVERTISEMENT

5 நாட்களுக்கு பின் மீன்பிடிக்க செல்லுவதால் அதிகளவில் மீன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT