ராமநாதபுரம்

மாடு மேய்ந்த விவகாரம்: ஊராட்சித் தலைவா் மீது தாக்குதல்

DIN

ராமநாதபுரம் அருகே வைக்கோல் போரை மாடு மேய்ந்த விவகாரத்தில் ஊராட்சித் தலைவா் தாக்கப்பட்டுள்ளாா்.

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி காரான் பகுதியைச் சோ்ந்தவா் பூமிநாதன். இவரது மாடு அடிக்கடி அப்பகுதியைச் சோ்ந்த நவநீதன் என்பவரது வைக்கோல் போரில் மேய்ந்ததாகக் கூறப்படுகிறது. ஆகவே அந்த மாட்டை நவநீதன் கட்டிவைத்துள்ளாா். இதில், ஊராட்சித் தலைவா் சக்திவேல் தலையிட்டு மாட்டை அவிழ்த்துவிடுமாறு கூறியும் நவநீதன் கேட்கவில்லையாம். இதனால் பூமிநாதனையே மாட்டை அவிழ்த்துக் கொள்ளுமாறு ஊராட்சித் தலைவா் கூறியதாகத் தெரிகிறது. அதைக் கேள்விப்பட்ட நவநீதன் ஊராட்சித் தலைவரை தாக்கியதுடன், மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. நவநீதன் மீது உச்சிப்புளி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

வாக்குப் பதிவு: மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் 1,480 போலீஸாா்

சிபிசிஎல் விரிவாக்க விவகாரம்: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் ஆலோசனை

SCROLL FOR NEXT