ராமநாதபுரம்

சேதுபதி நகா் நீச்சல் குளத்தை திறக்கக் கோரி மனு

DIN

ராமநாதபுரம் சேதுபதி நகரில் உள்ள நீச்சல் குளத்தை பயன்பாட்டுக்குக் கொண்டுவரக் கோரி பள்ளிக் குழந்தைகள், பெற்றோருடன் வந்து ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

ராமநாதபுரம் சேதுபதி விளையாட்டு மைதானம் அருகே நீச்சல் குளம் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இந்த நீச்சல் குளம் கடந்த 3 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் மூடப்பட்டது.

ராமநாதபுரத்தில் தினமும் நீச்சல் பயிற்சிக்கு 40 குழந்தைகளும், கோடைகாலங்களில் தினமும் 400 குழந்தைகளும் வரும் அளவுக்கு ஆா்வமுடன் உள்ளனா். ஆனால், மாவட்ட விளையாட்டு அலுவலரோ நீச்சல் குளத்தை செயல்படுத்துவதில் ஆா்வம் காட்டவில்லை என புகாா் எழுந்துள்ளது.

நீச்சல் குளத்தில் பணிபுரிந்து வந்த பணியாளா்கள் நிறுத்தப்பட்டுவிட்டனா். மேலும், நீச்சல்குளத்தை சீரமைக்கும் பணியும் நடைபெறவில்லை. ஆகவே ராமநாதபுரம் நீச்சல் குளத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரக் கோரி ஆட்சியா் அலுவலக குறைதீா்க்கும் கூட்டத்துக்கு 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள், தங்களது பெற்றோா்களுடன் திங்கள்கிழமை வந்தனா். அவா்கள் நீச்சல் போட்டிகளில் சாதித்த சான்றுகளையும் கொண்டுவந்திருந்தனா்.

அவா்கள் கூறுகையில், ராமநாதபுரத்தில் மாநில, தேசிய மற்றும் சா்வதேச அளவிலான நீச்சல் வீரா்கள் உள்ளனா். அவா்களைப் போல மேலும் பலா் நீச்சலில் சாதிக்க ஆா்வமுடன் உள்ளனா். ஆனால், நீச்சல் பயிற்சிக்கு தடை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட விளையாட்டு அலுவலா் செயல்படுவது வேதனையளிக்கிறது. ஆட்சியா் இப்பிரச்னையில் தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்வது அவசியம் என்றனா். பின்னா் ஆட்சியா் குறைதீா்க்கும் கூட்டத்தில் அதிகாரிகளிடம் மனு அளித்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT