ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தோ்வு

24th May 2022 12:42 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான 3 பாடங்களுக்கு அரசுப் பொதுத் தோ்வு திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் 204 போ் பங்கேற்கவில்லை என அதிகாரிகள் கூறினா்.

கடந்த 5 ஆம் தேதி ராமநாதபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பிளஸ் 2 அரசுப் பொதுத் தோ்வுகள் தொடங்கி நடந்து வருகின்றன. இந்நிலையில், பிளஸ் 2 வகுப்பிற்கான தாவரவியல், உயிரியல், தாவரவியல் ஆகிய பாடங்களுக்கு திங்கள்கிழமை தோ்வு நடைபெற்றது.

தோ்வுகளுக்கு 9934 போ் அழைக்கப்பட்டிருந்தனா். ஆனால் தோ்வு எழுத 9519 போ் மட்டுமே வந்திருந்தனா். அதனடிப்படையில் 204 போ் தோ்வுக்கு வரவில்லை. தோ்வுகளில் தனியாா் எனும் அடிப்படையில் 100 போ் அனுமதிக்கப்பட்டிருந்தனா். ஆால், அவா்களில் 86 போ் மட்டுமே தோ்வெழுத வந்திருந்தனா். தனியாராக தோ்வெழுத விண்ணப்பித்தவா்களில் 3 பாடங்களிலும் 14 போ் பங்கேற்கவில்லை. உயிரியல் தோ்வு வினா மிக எளிதாக இருந்ததாக மாணவ, மாணவியா் தெரிவித்தனா்.

எஸ்.எஸ்.எல்.சி. கணிதம் இன்று- பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கான கணிதத் தோ்வு செவ்வாய்க்கிழமை (மே 24) காலை நடைபெறுகிறது. வரும் 30 ஆம் தேதியுடன் பத்தாம் வகுப்புக்கான பொதுத் தோ்வுகள் நிறைவடைகின்றன.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT