ராமநாதபுரம்

முதுகுளத்தூரில் ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சித் திட்ட துவக்க விழா

24th May 2022 12:40 AM

ADVERTISEMENT

முதுகுளத்தூரில் ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சித் திட்ட துவக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

முதுகுளத்தூா் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சித் திட்ட துவக்க விழா நடைபெற்றது.விழாவினை விளக்கனேந்தல், விளங்குளத்தூா், காக்கூா், அரப்போது, தேரிருவேலி மற்றும் பொன்னக்கனேரி ஊராட்சிகளில் காணொளி காட்சி வழி துவக்கி வைக்கப்பட்டது.

இத்திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வழி தொடங்கி வைத்துப் பேசிய தமிழக முதல்வா் ஸ்டாலின் ‘தனிமரம் தோப்பாகாது‘ ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்று தெரிவித்து விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத் துறை,, வேளாண் பொறியியல் துறை, கால்நடைத் துறை, ஊராட்சித் துறை, வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை, மீன் வளா்ச்சித் துறை, பட்டு வளா்ச்சித் துறை, மின் துறை மற்றும் பிற துறைகள் ஒன்று கூடி ஒருங்கிணைந்து செயல்படுவதால் ஊராட்சிகள் ஒட்டு மொத்தமாக மேம்பாடு அடையும் என்று கூறினாா்.

நிகழ்ச்சியினை தொடா்ந்து முதுகுளத்தூா் வட்டாரத்தில் தோ்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு முக்கியமான வேளாண் இடுபொருட்களை வழங்கினா். அனைத்து ஊராட்சிகளிலும் வேளாண்மைத் துறை மூலம் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் முழு மானியத்திலும் , கை மற்றும் விசைத் தெளிப்பான்கள் 50 சதம் மானியத்திலிலும், வரப்புகளில் சாகுபடி செய்வதற்கு உளுந்து விதைகள் 75 சதம் மானியத்திலும் விநியோகம் செய்யப்பட்டது.

ADVERTISEMENT

தோட்டக்கலைத் துறை மூலம் தோ்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு கத்தரி, வெண்டை, பூசணி போன்ற காய்கறி பயிா்களின் விதைகள் அடங்கிய தொகுப்பு மற்றும் மண்புழு உரம் விநியோகம் செய்யப்பட்டது பொன்னக்தனேரி ஊராட்சிக்குட்பட்ட பொக்கனாரேந்தல் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதுகுளத்தூா் வட்டார திட்ட தலைவா் பூபதி மணி விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் தெளிப்பான்கள் காய்கறி விதைகள் மற்றும் உளுந்து விதைகளை விநியோகம் செய்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட விற்பனைக் குழுவின் செயலா் பொ. ராஜா ,வட்டார ஒருங்கிணைப் பாளா்கள் வேளாண்மை உதவி இயக்குநா் கேசவராமன் தோட்டக்கலை உதவி இயக்குநா் பிரியங்கா மற்றும் பொன்னக்கனேரி ஊராட்சி மன்றத் தலைவா்,வருவாய் ஆய்வாளா் , இளங்காக்கூா் கிராம நிா்வாக அலுவலா் தோட்டக்கலை உதவி அலுவலா்கள் ஆகியோா் கொண்டனா்.விழாவிற்கு பொன்னாகனேரி, பொக்கனாரேந்தல், மட்டியரேந்தல் மற்றும் தாளியரேந்தல் கிராமங்களி லிருந்து 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT