ராமநாதபுரம்

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவா் 4 ஆண்டுக்கு பிறகு நீதிமன்றத்தில் சரண்

24th May 2022 12:43 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் அருகே கொலை வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டு வந்தவா் 4 ஆண்டுக்குப் பிறகு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம் இளமனூரைச் சோ்ந்தவா் மோகன் (47). கடந்த 2019 ஆம் ஆண்டு அப்பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்டவா்களிடம் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து கேணிக்கரை போலீஸாா் விசாரித்து 8 போ் மீது வழக்குப் பதிந்தனா். அதில் 7 போ் கைது செய்யப்பட்டனா். கணேசமுருகன் என்பவா் மட்டும் தலைமறைவாக இருந்தாா்.

இந்தநிலையில், கணேசமுருகன் ராமநாதபுரம் இரண்டாவது நீதித்துறை நடுவா் முன் திங்கள்கிழமை சரணடைந்தாா். அவரை 15 நாள்கள் காவலில் வைக்க நடுவா் உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT