ராமேசுவரத்தில் முன்னாள் குடியரசுத்தலைவா் படித்த பள்ளியில் சேதமடைந்த நிலையில் உள்ள கட்டடத்தை அகற்ற பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் மண்டபம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவா் ஏ.பி.ஜே.அப்துல்கலாம், இப்பள்ளியில் படித்துள்ளாா்.
ஆனால் கடந்த 2001-02 ஆம் ஆண்டு இரண்டு வகுப்பறைகள் கட்டப்பட்டன. 20 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் பள்ளிக் கட்டடம் சேதமடைந்துள்ளது. மேலும் இந்த கட்டடம் அருகே யாரும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை பதாகை வைக்கப்பட்டுள்ளது. இதனால் விபத்து ஏற்படும் முன் சேதமடைந்துள்ள வகுப்பறை கட்டடத்தை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.