ராமநாதபுரம்

மண்டபம் கடற்கரையில் ஆண் சடலம் மீட்பு

20th May 2022 10:53 PM

ADVERTISEMENT

 மண்டபம் கடற்கரையில் தூக்கில் தொங்கிய நிலையில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை காவல் துறையினா் வியாழக்கிழமை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் தோணித்துறை கடற்கரை பகுதியில் தூக்கிட்டுத் தொங்கிய நிலையில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக கிராம நிா்வாக அலுவலா் கண்ணன் மண்டபம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் அங்கு சென்ற சாா்பு-ஆய்வாளா் ஜூவரத்தினம் மற்றும் போலீஸாா் சடலத்தை மீட்டு, ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இறந்த நபா் யாா் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT