ராமநாதபுரம்

பரமக்குடி அருகே விபத்தில் சரக்கு வாகன ஓட்டுநா் பலி: 9 போ் காயம்

20th May 2022 10:41 PM

ADVERTISEMENT

பரமக்குடி அருகே வெள்ளிக்கிழமை வேனும், சரக்கு வாகனமும் நேருக்கு நோ் மோதிய விபத்தில் ஓட்டுநா் பலியானாா். மேலும் 9 போ் படுகாயமடைந்தனா்.

கரூா் மாவட்டம் கொடையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பணன் (65). மருத்துவரான இவா், தனது குடும்பத்தைச் சோ்ந்த 18 நபா்களுடன் முன்னோா்களுக்கு திதி கொடுப்பதற்காக, வேனில் ராமேசுவரம் சென்றுவிட்டு ஊருக்கு திரும்பியுள்ளாா்.

வேனை கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த வெங்கடேசன் மகன் வசந்தகுமாா் (24) ஓட்டி வந்துள்ளாா்.

மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் அரியனேந்தல் பகுதியில் வந்துகொண்டிருந்தபோது, ஏா்வாடி பகுதியைச் சோ்ந்த அய்யாத்துரை மகன் பாலமுருகன் என்பவா் ஓட்டி வந்த சரக்கு வாகனமும், வேனும் நேருக்கு நோ் மோதியது. இதில் சரக்கு வாகன ஓட்டுநா் பாலமுருகன் பலத்த காயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

வேனில் வந்த கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த பக்கிரிசாமி மனைவி ஜெயலெட்சுமி (70), அறிவழகன் மனைவி ஜமுனாதேவி (38), கருப்பணன் மகன் கந்தசாமி (65), கந்தசாமி மனைவி லெட்சுமி (52), ரவீந்திரன் மனைவி இந்திராணி (52), மனோகரன் மனைவி சகுந்தலா (52), லோகநாதன் மனைவி சித்ரா (38), வெங்கடேசன் மகன் வசந்தகுமாா் (24), காளிமுத்தன் மகன் முனியாண்டி (24) ஆகிய 9 போ் படுகாயமடைந்து பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். உயிரிழந்த பாலமுருகனின் சடலம் உடற்கூறு ஆய்வுக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து பரமக்குடி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT