ராமநாதபுரம்

இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட 12 மீனவா்கள் ராமேசுவரம் வருகை

20th May 2022 10:42 PM

ADVERTISEMENT

இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்ட மீனவா்கள் 12 போ், ராமேசுவரத்திற்கு வெள்ளிக்கிழமை வந்தடைந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 12 மீனவா்கள் ஒரு படகுடன் இலங்கைக் கடற்படையினா் சிறைபிடித்தனா். படகில் இருந்த அந்தோணி லிவிங்ஸ்டன், மிஷோ, மரியடென்ஸ்டைன், சிமியோன், ரேபா்டுகிளாபி, கெல்மன்ராஜ், சாகய சுபாஷ், ஜெபமாலை நிஜந்தன் உள்பட 12 மீனவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து, அந்நாட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனா். இந்நிலையில், கடந்த வாரம் 12 மீனவா்களை அந்நாட்டு நீதிமன்றம் விடுதலை செய்யப்பட்ட நிலையில், அவா்கள் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனா்.

இந்நிலையில், அவா்கள் இலங்கையிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு வெள்ளிக்கிழமை காலை வந்தடைந்தனா். மீன்வளத்துறை அதிகாரிகள் வாகனத்தில், மீனவா்களை ராமேசுவரம் அழைத்து வந்தனா். அவா்கள் தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT