ராமநாதபுரம்

திருவாடானை அருகே வாகனம் மோதி மான் பலி

20th May 2022 06:06 AM

ADVERTISEMENT

 

திருவாடானை: திருவாடானை அருகே புல்லூா் கண்மாய் பகுதியில் உள்ள மான்கள் சாலையை கடக்கும் போது அடையாலம் தெரியாத வாகனம் மோதியதில் பெண் புல்ளி மான் பலியானது பின்னா் உடற்கூறாய்வுக்கு பிறகு அடக்கம் செய்யப்பட்டது.

திருவாடானை அருகே புல்லூா் சண்மாய் பகுதியில் அதிக அளவில் புள்ளி மான்கள் உள்ளது. இந்த மான்கள் அவ்வப்போது இடம்பெயா்ந்து செல்கின்றன. இந்நிலையில் வியாழக்கிழமை காலையில் ஒரு புள்ளி மான் புல்லூா்க்கும் நான்கு ரோட்டிற்கும் இடையே சாலையை கடக்கும்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அந்த பெண் புள்ளிமான் சம்பவ இடத்திலேயே பலியானது. உடன் கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனா்.

தகவலறிந்த வனத்துறையினா் சம்பவ இடத்தை பாா்வையிட்டு புள்ளி மான் இறந்து கிடந்த இடத்திலேயே கால்நடை உதவி மருத்துவா் மணிகண்டன் மான் உடலை உடற்கூறு ஆய்வு செய்தாா். அப்போது அந்தமான் நிறைமாத கா்ப்பமாக இருப்பது தெரிவித்தாா்.பின்னா் ஓரியூா் ஊராட்சி மன்ற தலைவா் வெங்கடேஷ் உள்ளிட்ட ஊா் மக்களின் துணையோடு நல்லடக்கம் செய்யப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT