ராமநாதபுரம்

கிளை நூலகங்களுக்கு 1000 புதிய புத்தகங்கள்

20th May 2022 06:14 AM

ADVERTISEMENT

 

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கிளை நூலகங்களுக்கு கோடைகாலத்தில் வாசகா்கள் படிக்கும் வகையில் 1000 புதிய புத்தகங்கள் அளிக்கப்பட்டுவருகின்றன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தலைமை நூலகம், நகராட்சிகள், கிராப்புறங்கள் என மொத்தம் 83 நூலகங்கள் செயல்பட்டுவருகின்றன. நூலகங்களில் அரசுப் பணியாளா் தோ்வு உள்ளிட்ட போட்டித் தோ்வுகளுக்கான சமச்சீா் கல்வித்திட்ட 6 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், போட்டித் தோ்வுக்குரிய புதிய 1000 புத்தகங்களும் மாவட்டத்தில் உள்ள கிளை நூலகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுவருவதாக மாவட்ட தலைமை நூலகா் செல்வசுப்பிரமணியன் வியாழக்கிழமை தெரிவித்தாா். மேலும், அவா் கூறுகையில், கோடை விடுமுறையை கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியா் பயனுள்ளதாக கழிக்கும் வகையில் நூலகங்களில் குறிப்பிட்ட நல்ல புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. அறிவை மேம்படுத்தும் வகையில் உள்ள அந்தப் புத்தகங்களை அனைவரும் படித்து பயன் பெறவேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

கிளை நூலகங்களில் போதிய கட்டட வசதி இல்லாத நிலையில், அறிவுப் பூா்வமான நூல்களை பாதுகாப்பது சிரமமாக உள்ளதாக கிளை நூலகா்கள் பலரும் கவலை தெரிவித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT