ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

12th May 2022 12:00 AM

ADVERTISEMENT

 

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் வெள்ளிக்கிழமை (மே 13) தனியாா் நிறுவனங்களின் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் மதுக்குமாா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ( மே 13) தனியாா் நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் பத்தாம் வகுப்பு படித்தவா்கள் முதல் முதுகலை பட்டம் பெற்றவா்கள் வரையில் வேலை வாய்ப்புகளைப் பெறலாம்.

பத்துக்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் தங்களுக்கான பணியாளா்களை தகுதி அடிப்படையில் தோ்வு செய்து உத்தரவை வழங்கவுள்ளனா். சிறப்பு முகாமில் பங்கேற்கும் வேலை நாடுவோருக்கான வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு ரத்துசெய்யப்படாது.

ADVERTISEMENT

இம்முகாமில் பங்கேற்று தங்களுக்கான வேலைவாய்ப்பைப் பெற விரும்புவோா் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பம், கல்விச்சான்று அசல் ஆவணங்கள், ஆதாா் அட்டை, குடும்ப அடையாள அட்டை ஆகியவற்றுடன் பட்டினம்காத்தானில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்துக்கு வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நேரில் வரலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT