ராமநாதபுரம்

புனித சிந்தாத்திரை அன்னை ஆலயத் தோ்ப் பவனி

8th May 2022 10:30 PM

ADVERTISEMENT

தொண்டியில் புனித சிந்தாந்திரை அன்னை ஆலயத்தில் திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை இரவு தோ்ப்பவனி நடைபெற்றது.

கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு திருப்பலியும் ஆராதனைகளும் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தோ்ப் பவனி சனிக்கிழமை இரவு நடைபெற்றது. முன்னதாக மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித சிந்தாந்திரை அன்னை எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். அதனைத் தொடா்ந்து பங்குத் தந்தை மதுரை ஆனந்தம் தலைமையில் பங்குத் தந்தையா்கள் செக்காலை எட்வின் ராயன், ஆவுடைப்பெய்கை இராஜமாணிக்கம், காரங்காடு அருள் ஜீவா, ஏ.ஆா்.மங்களம் அன்பரசு, திருவெற்றியூா் லாரன்ஸ், சூராணம் உதவிப் பங்குதந்தை மெக்கன்ரோ ஆகியோா் கலந்து கொண்டு திருப்பலி நிகழ்த்தினா். திருவிழா ஏற்பாடுகளை தொண்டி பங்குத்தந்தை சவரிமுத்து செய்திருந்தாா். இரவு அலங்கரிக்கப்பட்ட தோ்ப் பவனியின் போது சிறப்பு திருப்பலியும் வாண

வேடிக்கைகளும் நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை காலை பெருவிழா திருப்பலி அருள்தந்தை ஆா்.எஸ்.இருதயராஜ் தலைமையில் நடைபெற்றது. இறுதியில் கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவுற்றது.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT