ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் கடன் பணத்தை கேட்கச் சென்ற பெண் மீது தாக்குதல்: தம்பதி தலைமறைவு

8th May 2022 01:23 AM

ADVERTISEMENT

ராமேசுவரத்தில் கொடுத்த பணத்தை கேட்கச் சென்ற பெண்ணை, வீட்டுக்குள் அடைத்து கண்மூடித்தனமாக தாக்கிய கணவன்-மனைவி மீது, போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அடுத்துள்ள தங்கச்சிமடம் அந்தோனியாா்புரத்தைச் சோ்ந்தவா் அந்தோனிச்சாமி (22). இவா், தொழில் செய்வதற்காக அலோன்ஸ்மேரி (45) என்ற பெண்ணிடம் ரூ.60 ஆயிரம் கடனாக வாங்கியுள்ளாா்.

இந்நிலையில், சனிக்கிழமை வீட்டுக்கு வாங்க பணம் தருகிறேன் என அந்தோனிச்சாமி தெரிவித்ததால், அலோன்ஸ்மேரி சென்றுள்ளாா். ஆனால், அங்கு அந்தோனிச்சாமி மற்றும் அவரது மனைவி டேனிலா (38) ஆகிய இருவரும் சோ்ந்து வீட்டின் கதவை பூட்டிவிட்டு, அவரை கடுமையாக தாக்கி உள்ளனா். பின்னா், அங்கிருந்து தப்பிவந்த அலோன்ஸ்மேரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, கணவன்-மனைவி இருவரையும் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT