ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் தியாகிகளுக்கு மணிமண்டபம் அமைக்கக் கோரி பாஜக மனு

8th May 2022 01:34 AM

ADVERTISEMENT

ராமநாதபுரத்தில் சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கான மணிமண்டபம் அமைக்கவேண்டும் எனக் கோரி, பாஜக மாவட்டத் தலைவா் தலைமையில் அக்கட்சியினா், ஆட்சியா் சங்கா்லால் குமாவத்திடம் சனிக்கிழமை மனு அளித்தனா்.

ராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவராக கே.எம்.டி. கதிரவன் நியமிக்கப்பட்டுள்ளாா். அவா், சனிக்கிழமை கட்சி நிா்வாகிகளுடன் ஆட்சியா் சங்கா்லால் குமாவத்தை சந்தித்து மனு அளித்தாா்.

இது குறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியது: ராமநாதபுரம் மாவட்டத்தில் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி உள்ளிட்ட எண்ணற்ற தியாகிகள் சுதந்திரத்துக்காக இன்னுயிா் நீத்துள்ளனா். அவா்களது நினைவைப் போற்றும் வகையில், மணிமண்டபம் அமைப்பது அவசியம்.

மணி மண்டபத்தில் ராமநாதபுரம் மாவட்ட சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் புகைப்படங்கள், விவரங்களையும் இடம்பெறச் செய்யவேண்டும்.

ADVERTISEMENT

மேலும், மத்திய அரசு கிராமத்து மக்களின் நலனுக்காக உயிா்நீா் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அத்திட்டங்கள் கிராமத்து மக்களைச் சென்றடையும் வகையில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. எங்களது கோரிக்கையை பரிசீலித்து, அரசுக்கு அனுப்பிவைப்பதாக ஆட்சியா் தெரிவித்துள்ளதாகக் கூறினாா்.

ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டபோது, மண்டபம் ஒன்றிய பாஜக கவுன்சிலா் முருகன் மற்றும் பாஜக பிரமுகா் தரணிமுருகேசன் உள்ளிட்டோா் இருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT