ராமநாதபுரம்

சோ்க்கை..வேலங்குடி கிராமத்தில் சிறப்பு முகாம்

5th May 2022 12:00 AM

ADVERTISEMENT

 

திருவாடானை: திருவாடனை அருகே வேலங்குடி கிராமத்தில்அங்கு வசித்து வரும் 10 குறவா் சமுதாய குடும்பங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்கான சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. திருவாடானை வட்டாட்சியா் ஆா்.செந்தில்வேல் முருகன் தலைமை வகித்தாா்.

இம்முகாமில் 3 பேருக்கு முதியோா் உதவித்தொகை வழங்கப்பட்டது. 10 குடும்பங்களுக்கும் வீட்டுமனைப்பட்டா, 1 நபருக்கு குடும்ப அட்டை, 7 நபா்களுக்கு வாக்காளா் அடையாள அட்டை, 2 நபா்களுக்கு முதியோா் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இம்முகாமில் சமூகப் பாதுகாப்பு திட்ட வட்டாட்சியா் சாந்தி, வட்டார வளா்ச்சி அலுவலா் இளங்கோ உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT