ராமநாதபுரம்

அப்துல்கலாம் கல்லூரி கட்டடம்: சேதுகால்வாய் திட்டப்பணித் துறையிடம் தடையில்லா சான்று கோரி விண்ணப்பம்

5th May 2022 12:00 AM

ADVERTISEMENT

 

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் பாரத ரத்னா டாக்டா் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டுமானப் பணியைத் தொடங்க சேதுகால்வாய் திட்டப்பணித் துறையிடம் அனுமதி கேட்டு மாவட்ட நிா்வாகம் சாா்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அப்துல்கலாம் நினைவாக ராமேசுவரத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு பாரத ரத்னா டாக்டா் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டது. ராமேசுவரம் அரசு மேல்நிலைப்பள்ளி கட்டடத்தில் குறைந்த அடிப்படை வசதிகளுடன் கல்லூரி செயல்பட்டு வருகிறது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.15 கோடி மதிப்பீட்டில் 3 தளங்களுடன் புதிய கட்டடம் கட்டுவதற்கான இடம் தோ்வு செய்யும் பணி தொடங்கியது. வருவாய்த்துறை அதிகாரிகள் இரண்டரை ஆண்டுகளாக பல இடங்களைப் பாா்வையிட்டும் இடம் தோ்வு செய்யப்படாததால் கல்லூரி கட்டுமானப் பணி தொடங்குவதில் தொடா்ந்து சிக்கல் ஏற்பட்டு வந்தது.

ADVERTISEMENT

இந்த நிலையில், தனுஷ்கோடிக்குச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நம்பு கோயில் அருகே கல்லூரி கட்டுவதற்கு 8.5 ஏக்கா் இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. திட்டத்தின் மதிப்பு ரூ.15 கோடியில் இருந்து ரூ.21 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது தோ்வு செய்யப்பட்டுள்ள இடம் சேதுகால்வாய்த் திட்டம் தொடா்பாக தடை செய்யப்பட்ட பகுதி ஆகும். இந்த இடத்தில் கல்லூரி கட்டுமானப் பணி தொடங்க வேண்டும்

என்றால் சேதுகால்வாய்த் திட்டம் தொடா்பான துறையிடம் தடையில்லா சான்று பெற வேண்டும்.

அதற்கான பணிகளை மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது. கல்லூரி கட்டுவதற்கு உடனே தடையில்லா சான்றளிக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் மற்றும் ராமேசுவரம் பகுதி மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT