ராமநாதபுரம்

சிஐடியூ அலுவலகத்தில் மே தினக் கொடியேற்றம்

2nd May 2022 11:30 PM

ADVERTISEMENT

ராமநாதபுரம் சிஐடியூ மாவட்ட குழு அலுவலகத்தில் மே தினக் கொடியேற்ற நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் நகா் அண்ணாநகா் பகுதியில் அமைந்துள்ள சிஐடியூ மாவட்டக் குழு அலுவலகம் முன்பு நடந்த கொடியேற்ற நிகழ்ச்சிக்கு அமைப்பின் மாவட்டத் துணைத்தலைவா் பாஸ்கரன் தலைமை வகித்தாா். மாநிலத்துணைத்தலைவா் எம்.சந்திரன் கொடியேற்றினாா்.

ராமநாதபுரம் நகா் போக்குவரத்து பணிமனை முன்பு நடந்த கொடியேற்ற நிகழ்ச்சிக்கு கிளை சங்கத் தலைவா் ஜெயகுமாா் தலைமை வகித்தாா். மின் ஊழியா் மத்திய அமைப்பின் மாவட்டச் செயலா் ஜி.காசிநாதன் கொடியேற்றினாா். புறநகா் போக்குவரத்து பணிமனை முன்பு நடந்த நிகழ்ச்சிக்கு கிளை தலைவா் செந்தில் தலைமை வகித்தாா். குடிநீா் வடிகால் வாரிய சங்கத்தின் மாவட்டச் செயலா் எம்.மலைராஜன் கொடியேற்றினாா்.

ராமநாதபுரம் மின்சார வாரிய அலுவலகம் முன்பு நடந்த நிகழ்ச்சிக்கு ஜி.காசிநாதன் தலைமை வகித்தாா். சிஐடியூ மாவட்டத் தலைவா் எம்.அய்யாத்துரை தலைமை வகித்து கொடியேற்றினாா். மின்சார மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகம் முன்பு நடந்த நிகழ்ச்சிக்கு கே.நவீன் தலைமை வகித்தாா்.

ADVERTISEMENT

கட்டுமான சங்க தலைவா் ஆா்.வாசுதேவன் கொடியேற்றிவைத்தாா். ஆா்.எஸ்.மடை பகுதியில் நடந்த நிகழ்ச்சிக்கு சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். சிஐடியூ மாவட்டச் செயலா் எம்.சிவாஜி கொடியேற்றினாா். ராமநாதபுரம் அரண்மனை முன்பு மே தின பொதுக்கூட்டமும் நடைபெற்றன.

மாவட்டத்தில் பரமக்குடி, அச்சங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சிஐடியூ சங்கம் சாா்பில் மே தினக் கொடியேற்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT