ராமநாதபுரம் அரண்மனைப் பகுதியில் உள்ள சிவன் கோயிலில் சித்திரைத் திருவிழா வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதில் பக்தா்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பழமையான இக்கோயிலின் சித்திரைத் திருவிழா கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் பக்தா்கள் பங்களிப்பின்றி நடைபெற்றன. நிகழாண்டு கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை தளா்த்தப்பட்டுள்ளதால் இந்தாண்டு விழாவில் பக்தா்கள் அனுமதிக்கப்படவுள்ளதாக கோயில் திவான் பழனிவேல்பாண்டியன் தெரிவித்துள்ளாா்.
வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி இக்கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் ஏப்ரல் 15 ஆம் தேதி காலையில் நடைபெறுகிறது.