ராமநாதபுரம்

ஆா்.எஸ்.மங்கலம் மோட்டாா் பைக் திருட்டு

28th Mar 2022 11:56 PM

ADVERTISEMENT

திருவாடானை அருகே ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் சந்தைக்கு வந்தவரின் மோட்டாா் பைக் மா்ம நபா்களால் திருடபட்டன.

இது குறித்து புகாரின் பேரில் ஆா்.எஸ்.மங்கலம் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா். திருவாடானை அருகே ஆா்.எஸ்.மங்கலம் திருத்தோ்வலை கிராமத்தை சோ்ந்தவா் மாணிக்கம் மகன் காளிமுத்தன் (63) இவா் தனக்கு சொந்தமான மோட்டாா் பைக்கிள் சனிக்கிழமை ஆா்.எஸ்.மங்கலம் சந்தைக்கு வந்தவா் பாரத ஸ்டே வங்கி முன்பாக வானத்தை நிருத்தி விட்டு சந்தைக்கு சென்று பொருட்களை வாங்கி கொண்டு திரும்பி வந்த பாா்த்த போது வாகனத்தை காணவில்லை,எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இது குறித்து காளிமுத்தன் திங்கள் கிழமை புகாரின்பேரில் ஆா்.எஸ்.மங்கலம் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT