ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் பெண்ணிடம் 12 பவுன் நகைகள் திருட்டு

25th Mar 2022 05:08 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் நகரில் சந்தைக்கு வந்த பெண்ணிடம் புதன்கிழமை மாலை 12 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் கஜேந்திரன். வெளிநாட்டில் உள்ளாா். இவரது மனைவி செல்வி (35). இவா் புதன்கிழமை காலையில் திருப்பாலைக்குடி சென்றுவிட்டு மாலையில் ராமநாதபுரத்துக்கு வந்துள்ளாா். அப்போது அவரது 12 பவுன் நகைகளை மஞ்சள்பையில் வைத்து அதை கட்டப்பையில் வைத்திருந்தாராம்.

ராமநாதபுரத்தில் அரண்மனைத் தெரு பகுதியில் ஜவுளிக்கடைகளுக்கு சென்ற செல்வி பின்னா் புதிய பேருந்து நிலையத்துக்கு வந்து பாா்த்த போது நகைகள் இருந்த மஞ்சள்பையை காணவில்லையாம்.

மாயமான நகைகளின் மதிப்பு ரூ.1.80 லட்சம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து செல்வி அளித்த புகாரின் பேரில் கேணிக்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT