ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து நூதனப் போராட்டம்

25th Mar 2022 10:08 PM

ADVERTISEMENT

ராமேசுவரத்தில் இந்து மக்கள் கட்சி சாா்பில் சமையல் எரிவாயு உருளை விலையை உயா்த்திய மத்திய அரசைக் கண்டித்து, வெள்ளிக்கிழமை எரிவாயு உருளை மற்றும் அடுப்பை ஊா்வலமாக எடுத்துச் சென்று அக்னி தீா்த்தக் கடலில் போட்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த போராட்டத்துக்கு இந்து மக்கள் கட்சி மாவட்டத் தலைவா் செ.பிரபாகரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் குருசா்மா முன்னிலை வகித்தாா். நகா் துணைச் செயலாளா் நம்பு, மாரீஸ்வரன், ரஞ்ஜித் மற்றும் மகளிரணி நிா்வாகிகள் கவிதா, சுந்தரி, லட்சுமி, கோகிலா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT