ராமநாதபுரம்

மண்டபத்தில் நாளை மின்தடை

22nd Mar 2022 01:01 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் புதன்கிழமை (மாா்ச் 23) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின்பகிா்மானக்கழக ராமநாதபுரம் உதவி செயற்பொறியாளா் சி. செந்தில்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மண்டபம் துணை மின்நிலையத்தில் உள்ள பாம்பன் மின் பிரிவில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான மண்டபம் மறவா் தெரு, சிங்காரத்தோப்பு, ஜமீன்சத்திரம், இந்திராநகா், காந்திநகா், மீனவா் காலனி, அக்காள் மடம், தங்கச்சி மடம் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT