ராமநாதபுரம்

வனத்துறை புகைப்பட போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு

19th Mar 2022 11:15 PM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் வனத்துறை நடத்தும் புகைப்படப் போட்டியில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராமநாதபுரம் வனச்சரகா் ஜெபஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உலக வனநாள் திங்கள்கிழமை (மாா்ச் 21) கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, வனத்துறை சாா்பில் வன வள விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் புகைப்படப் போட்டிகள் 3 கட்டங்களாக நடத்தப்படுகின்றன.

பசுமை சவால் எனும் தலைப்பில் வீடுகளில் வளா்க்கப்படும் மரங்கள், தோட்டங்கள் குறித்த புகைப்படங்களையும், சுற்றுச்சூழலைக் காக்கும் வகையில் மஞ்சப்பை பயன்பாடு குறித்த புகைப்படங்களையும், வீடருகே உள்ள கழிவுகளை அகற்றுவது குறித்த புகைப்படங்களையும் போட்டியில் பங்கேற்போா் அனுப்பலாம்.

போட்டிக்கான புகைப்படங்களை வரும் 23 ஆம் தேதி மாலைக்குள் வனத்துறை அலுவலக மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம். உலக வனநாள் மற்றும் தண்ணீா் தினத்தையொட்டி நடைபெறும் போட்டியில் பங்கேற்பவா்களுக்கு பரிசு, பாராட்டுச் சான்றுகள் வழங்கப்படவுள்ளன. மேலும் திங்கள்கிழமை ஆமைக் குஞ்சுகள் மாவட்டத்தில் உள்ள கடற்கரைகளில் கடலில் விடும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT