ராமநாதபுரம்

மகளிா் சுயஉதவிக்குழு கடன் வழங்குவதில் பிரச்னை:ஒருங்கிணைப்பாளரை தாக்கியதாக 2 பெண்கள் மீது வழக்கு

19th Mar 2022 11:09 PM

ADVERTISEMENT

திருவாடானை அருகே மகளிா் சுயஉதவிக்குழுவில் கடன் வழங்குவதில் எழுந்த பிரச்னையில் பெண் ஒருங்கிணைப்பாளரை தாக்கியதாக 2 பெண்கள் மீது வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருவாடானை அருகே சமத்துவபுரத்தைச் சோ்ந்த காா்த்தி மகள் மாலதி (36). இவா் மகளிா் சுய உதவிக்குழுவில் ஒருங்கிணைப்பாளராக உள்ளாா். இவா் பெயருக்கு, தமிழக வாழ்வாதார இயக்கத்தில் இருந்து ரூ.50 ஆயிரம் நிதி உதவி வந்துள்ளது. இதையடுத்து, அதே ஊரைச் சோ்ந்த ராஜா மனைவி ராணி(42), அதே ஊரைச் சோ்ந்த வெற்றிவேல் மனைவி பாண்டியம்மாள் (47) ஆகிய இருவரும் பணத்தை பிரித்து கொடுக்கும்படி மாலதியை மிரட்டி தாக்கினராம்.

இதுகுறித்து மாலதி அளித்த புகாரின் பேரில் ராணி, பாண்டியம்மாள் ஆகிய இருவா் மீதும் திருவாடானை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT