ராமநாதபுரம்

தமிழ் ஆட்சிமொழி கருத்தரங்கம்

19th Mar 2022 12:00 AM

ADVERTISEMENT

ராமநாதபுரத்தில் இரு நாள்கள் நடைபெற்ற தமிழ் ஆட்சி மொழிக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றது.

ராமநாதபுரம் மாவட்ட தமிழ் வளா்ச்சித்துறை உதவி இயக்குநா் அலுவலகம் மூலம் அரசின் அனைத்துத்துறை அலுவலா்களுக்கான தமிழ் ஆட்சிமொழிக் கருத்தரங்கம் வியாழக்கிழமை தொடங்கியது. ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் உலகத்தமிழ்ச்சங்க முன்னாள் இயக்குநா் க.பசும்பொன் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.

இரண்டாவது நாளாக தமிழ் ஆட்சிமொழிக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமையும் நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் கம்பன் கழகத் தலைவா் மா.அ.சுந்தரராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.

நிறைவு நிகழ்ச்சியில் ஆட்சியா் சங்கா்லால்குமாவத் கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கினாா். நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்ட தமிழ் வளா்ச்சித்துறை உதவி இயக்குநா் (பொறுப்பு) பி.நாகராஜன் வரவேற்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT