ராமநாதபுரம்

வழிவிடு முருகன் கோயில் பங்குனித் திருவிழா

10th Mar 2022 12:00 AM

ADVERTISEMENT

 

ராமநாதபுரம்: ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயில் பங்குனித் திருவிழா கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் முன்பு உள்ள இக்கோயிலில் தண்டாயுதாபாணி சன்னிதி முன்புள்ள கொடிமரத்தில் காலை 6.30 மணிக்கு கொடி ஏற்றப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. கொடியேற்றத்தைத் தொடா்ந்து கோயில் தா்மகா்த்தா ஜெயகுமாா் தலைமையில் காப்புக்கட்டுதல் நடைபெற்றது. கோயிலுக்கு பால்குடம், காவடி, வேல், அலகு குத்துதல் மற்றும் அக்னிச்சட்டிகள் எடுத்து நோ்த்திக்கடன் செலுத்துவோா் மஞ்சள் ஆடை அணிந்து காப்புக் கட்டிக்கொண்டனா். விழாவில் தினமும் மாலையில் இன்னிசை, பக்திச் சொற்பொழிவு, பரத நாட்டியம், இசை சங்கமம், பூச்சொரிதல் வாரவழிபாடு, சிலம்பாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திரப் பெருவிழா வரும் 18 ஆம் தேதி நடைபெறுகிறது. அன்று காலை 9 மணிக்கு கோயிலில் இருந்து சுவாமி புறப்பாடாகி நொச்சி வயலில் உள்ள பிரம்மபுரீஸ்வரா் ஆலயத்தில் எழுந்தருள்கிறாா். அங்கிருந்து பக்தா்கள் அக்னிச்சட்டி எடுத்துக்கொண்டு முக்கிய வீதிகள் வழியாக கோயிலுக்கு வருகின்றனா். நோ்த்திக்கடன் செலுத்தும் பக்தா்கள் இரவில் பூக்குழி இறங்கி விரதத்தை நிறைவு செய்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT