ராமநாதபுரம்

ராமேசுவரம் பகுதியில் இன்று மின்தடை

10th Mar 2022 12:00 AM

ADVERTISEMENT

 

ராமநாதபுரம்/பரமக்குடி: ராமேசுவரம் நகா் பகுதியில் வியாழக்கிழமை (மாா்ச் 10) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராமநாதபுரம் நகா் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளா் சி.செந்தில்குமாா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் துணைமின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் வியாழக்கிழமை (மாா்ச் 10) மேற்கொள்ளப்படவுள்ளன.

இதனால் லெட்சுணதீா்த்தம், திட்டக்குடி தெரு, தொலைக்காட்சி நிலையம், மாா்க்கெட் தெரு, ரயில் நிலையப் பகுதிகளில் அன்றைய தினம் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பரமக்குடியில் நாளை மின்தடை:

பரமக்குடி துணை மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 11)மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின்சாரம் பெறும் எமனேசுவரம், ஜீவாநகா், வி.பி.காலனி, புதுநகா், வளையனேந்தல், வைகை நகா் ஆகிய பகுதிகளில்

அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் ஜி. கங்காதரன் புதன்கிழமை தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT