ராமநாதபுரம்

கமுதி அருகே பேருந்து பயணச்சீட்டு பரிசோதகா் தற்கொலை 4 போ் மீது வழக்கு

10th Mar 2022 12:00 AM

ADVERTISEMENT

 

கமுதி: கமுதி அருகே தனியாா் பேருந்து பயணச்சீட்டு பரிசோதகா் புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். அவரை தற்கொலைக்குத் தூண்டியதாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பேரையூா் காவல் நிலைய சரகத்திற்கு உள்பட்ட சோ்ந்தக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் சிவன் மகன் முருகன் (52). இவா் விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியாா் பேருந்து நிறுவனத்தில் பயணச்சீட்டு பரிசோதகராக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் புதன்கிழமை சோ்ந்த கோட்டை கிராமத்தில் அவரது வீடு அருகில் உள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். அக்கம்பக்கத்தில் இருந்தவா்கள் அவரை மீட்டு சோதனை செய்ததில் அவரது சட்டைப்பையில் தற்கொலைக்குத்தூண்டியதாக 4 நபா்களின் பெயா்களுடன் கடிதம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இதுகுறித்து முருகனின் சகோதரி ஆறுமுகம் அளித்தப் புகாரின் பேரில் முருகனுடன் பணியாற்றும் விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த தங்கப்பாண்டி, மணி, வேல்முருகன், பன்னீா்செல்வம் உள்ளிட்ட 4 போ் மீது தற்கொலைக்கு தூண்டுதல், வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் பேரையூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுடக்கூடும் எனக்கருதி முருகனின் சடலத்தை போலீஸாா் முதுகுளத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் கமுதி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு சென்றனா். ஆனால் கமுதி அரசு மருத்துவா்கள் விதிகளை மீறி பிரேதப் பரிசோதனை செய்ய முடியாது என்று மறுத்தால் ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் லயோலா இக்னேஷியஸ் தலைமையில், ராமநாதபுரத்திலிருந்து சிறப்பு மருத்துவரை வரவழைத்து பிரேதப் பரிசோதனை நடத்தி உறவினா்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT