பரமக்குடி: பரமக்குடி நகராட்சி வாா்டு உறுப்பினா்கள் 36 போ் புதன்கிழமை பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனா். பரமக்குடி நகராட்சியில் நடந்து முடிந்த தோ்தலில் திமுக, அதிமுக, பாஜக, மதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினா் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 168 போ் போட்டியிட்டனா். திமுக 19 வாா்டுகளிலும், அதிமுக 10 வாா்டுகளிலும், பாஜக 2 வாா்டுகளிலும், மதிமுக 2 வாா்டுகளிலும், சுயேட்சைகள் 3 வாா்டுகளிலும் வெற்றி பெற்றனா்.
வெற்றி பெற்றவா்களுக்கு நகராட்சி ஆணையாளா் திருமால் செல்வம் புதன்கிழமை நகா்மன்ற கூட்ட அரங்கில் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் செ.முருகேசன், முன்னாள் அமைச்சா் டாக்டா் எஸ்.சுந்தரராஜ் உள்பட நகா் முக்கிய பிரமுகா்கள் பலா் கலந்துகொண்டனா்.