ராமநாதபுரம்

தோ்தல் முன்பகை: கமுதி அருகே மோதல்; ஒருவருக்கு கத்திகுத்து

3rd Mar 2022 12:09 AM

ADVERTISEMENT

 

கமுதி: கமுதி அருகே செவ்வாய்க்கிழமை இரவு கோயில் திருவிழாவில் தோ்தல் முன்பகை காரணமாக இரு தரப்பினா் மோதிக்கொண்டனா். ஒருவா் கத்தியால் குத்தப்பட்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள அபிராமம் காவல் சரகத்திற்கு உள்பட்ட பாப்பணம் கிராமத்தில் உள்ள முனியப்பசாமி கோயில் மாசித் திருவிழா நடைபெற்று வருகிறது. பாப்பணத்தை சோ்ந்தவரும், மானாமதுரையில் வசித்து வருபவருமான செல்லம் மகன் முனியசாமி (43) தனது குடும்பத்தினருடன் செவ்வாய்க்கிழமை இரவு காரில் சாமி கும்பிட வந்துள்ளாா். இந்நிலையில், பாப்பணம் கிராமத்தைச் சோ்ந்த காா்த்திகைச்சாமி மற்றும் அவரது உறவினா்கள் தோ்தல்

முன்பகை காரணமாக முனியசாமியின் காா் கண்ணாடியை உடைத்து, அவரை கத்தியால் குத்தியுள்ளனா். இதில் பலத்த காயமடைந்த முனியசாமி சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா். அபிராமம் போலீஸாா் வழக்குப்பதிந்து இரு தரப்பைச் சோ்ந்த 5 பேரை கைது செய்தனா்.15 பேரை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT