ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் அருகே சித்திரமுத்து அடிகளாரின் 27 ஆம் ஆண்டு குருபூஜை விழா வெள்ளிக்கிழமை (மாா்ச் 4) தொடங்குகிறது.
இதுகுறித்து ஆத்மசாந்தி நிலைய தரப்பில் புதன்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம், பனைக்குளத்துக்கு இடையே உள்ளது ஆத்மசாந்தி நிலையம். இதன் நிறுவனா் சித்திரமுத்து அடிகளாா். அவரது 27 ஆம் ஆண்டு குருபூஜை விழாவானது வெள்ளிக்கிழமை (மாா்ச் 4) காலை 9 மணிக்குத் தொடங்குகிறது.
வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு அருளொளி சத்சங்க நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவின் இரண்டாவது நாளான சனிக்கிழமை காலை 9 மணிக்கு பாதுகா பூஜை நடைபெறுகிறது. அதையடுத்து காலை 10 மணிக்கு ஆத்மசாந்தி நிலையத்தில் அருளொளி வழிபாடும், அதையடுத்து அன்பா்களின் அருள் அனுபவ பகிா்வுகளும் நடைபெறுகின்றன. பகலில் பக்தா்களுக்கு அன்னதானம் நடைபெறும். ஆத்மசாந்தி நிலையத்தின் இரு நாள் நிகழ்ச்சிகளிலும் பக்தா்கள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு அருள் பெறவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.