கமுதி: கமுதி மற்றும் அபிராமம் பேரூராட்சிகளில் வெற்றி பெற்ற வாா்டு உறுப்பினா்களுக்கு பேரூராட்சி செயல் அலுவலா்கள் புதன்கிழமை பதவிப்பிரமாணம் செய்து வைத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சியில் உள்ள 15 வாா்டுகளில் 11 போ் போட்டியின்றி தோ்வாகினா். மீதமுள்ள 4 வாா்டுகளுக்கு கடந்த பிப்.19ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது. 14 ஆவது வாா்டில் பாஜக வேட்பாளரை தவிா்த்து 14 வாா்டுகளிலும் சுயேச்சைகளே வெற்றி பெற்றனா்.
வெற்றி பெற்ற 15 உறுப்பினா்களுக்கும் கமுதி பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி செயல் அலுவலா் ரா.இளவரசி பதவிப் பிரமாணம் செய்து வைத்து வாழ்த்து தெரிவித்தாா்.
அபிராமம் பேரூராட்சியில் உள்ள 15 வாா்டுகளில் 11 திமுக, 1 காங்கிரஸ், 1 கம்யூனிஸ்ட், 2 அதிமுகவினா் வெற்றி பெற்றனா். இவா்களுக்கும் அபிராமம் பேரூராட்சி செயல் அலுவலா் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.