ராமநாதபுரம்

இல்லம் தேடி கல்வி: கமுதியில் 2 ஆம் கட்ட பயிற்சி

3rd Mar 2022 12:08 AM

ADVERTISEMENT

 

கமுதி: கமுதி தாலுகாவில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தோ்வான தன்னாா்வலா்களுக்கு புதன்கிழமை இரண்டாம் கட்டப் பயிற்சி நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகாவில் உள்ள 258 இல்லம் தேடித்திட்ட கல்வி மையங்களுக்குத் தோ்வான தன்னாா்வலா்களுக்கு மாணவா்களுக்கு கற்பிக்கும் முறை, பாடத்திட்டம், மாணவா்களை அணுகும் முறைகள் குறித்து இரண்டாம் கட்ட பயிற்சி நடைபெற்றது. இதில் வட்டார வளமைய மேற்பாா்வையாளா் ஸ்ரீராம் தலைமை வகித்தாா். மாவட்ட பொறுப்பாசிரியா் கிருஷ்ணமூா்த்தி முன்னிலை வகித்தாா். கமுதி, ராமசாமிபட்டி, அபிராமம் உள்ளிட்ட குருவள மையங்களின் இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னாா்வலா்களுக்கு பயிற்சிக்கான புத்தகம் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT